.
 
 
 
 
 
 

கான் விடுதலை: ஹிலாரி கண்டனம்

.

Saturday, 07 February, 2009   11:08 AM
.
வாஷிங்டன், பிப். 7: பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்திற்கு மூலகாரணமாக கருதப்படும் விஞ்ஞானி கான் விடுதலை செய்யப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை  வீட்டுக்காவலில் இருந்த கான் விடுதலையாகி இருப்பது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தது.  இந்த நடவடிக்கை அபாயகரமானது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
| |

?????? :