Advertisements




 
 
 
 
 
 

ஒபாமா புதிய உத்தரவு

.

Saturday, 07 February, 2009   11:03 AM
.
வாஷிங்டன், பிப். 7: அரசு ஒப்பந்த பணிகளில் தொழிற்சங்கத்தில் பதிவு செய்த தொழிலாளர்களை பணிக்கு  அமர்த்தி கொள்வதற்கான ஆணையை  அமெரிக்க அதிபர் ஒபாமா பிறப்பித்துள்ளார்.
.
இந்த ஆணையின்படி அமெரிக்க அரசு மேற்கொள்ள வேண்டிய கட்டிட பணி  மற்றும் உள்கட்டமைப்பு பணி திட்டங்களில் தொழிற்சங்கத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமர்த்தி கொள்ளப்படும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் நிர்ணயிக்கும் ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும்.

ஒபாமா பதவியேற்ற பிறகு கையெழுத்திட்டுள்ள தொழிலாளர் களுக்கு ஆதரவான 4வது  உத்தரவாக இது அமைந்துள்ளது. கிளிண்டன் காலத்தில் அமலில் இருந்த இந்த முறையை ஜார்ஜ் புஷ் ரத்து செய்தார். தற்போது ஒபாமா  இந்த முறையை மீண்டும் கொண்டுவந்துள்ளார்.
| |

மற்றவை :