கரத் அமர்சிங் சந்திப்பு |
||
. |
||
Wednesday, 04 February, 2009 11:00 AM
|
||
| . | ||
லக்னோ, பிப்.4: உத்தரபிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்தை இன்று சந்தித்து பேசுகிறார். |
||
| . | ||
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு தொகுதி உடன்பாடு குறித்து சமாஜ்வாதி கட்சி பேச்சு நடத்தி வருகிறது. எனினும் காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக தெளிவான பதிலை அளிக்காமல் இருக்கிறது. இந்நிலையில், மாற்று கூட்டணிக்கான வாய்ப்பை தேடும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியோடு சமாஜ்வாதி கட்சி பேச முடிவு செய்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்தை சந்தித்து பேசவுள்ளார். ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதனை சந்தித்து பேசியுள்ள நிலையில், அமர்சிங் இன்று பிரகாஷ் கரத்தை சந்திக்க உள்ளார். இடதுசாரிகளோடு எந்த கூட்டணியும் வைத்துக் கொள்வதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முடிவெடுக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























