.
 
 
 
 
 
 

இலங்கை: ஐ.நா. கவலை

.

Tuesday, 03 February, 2009   11:27 AM
.
நியூயார்க், பிப்.3: இலங்கையில் தமிழர் பகுதியில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இலங்கையில் அந்நாட்டு ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
.
இதனிடையே இலங்கையில் வடக்குப் பகுதியில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டு இதில் 18 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.

இலங்கை போரில் அப்பாவி தமிழர்கள் சிக்கித் தவிப்பது வேதனை தருவதாக ஐ.நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழி செய்ய வேண்டுமென்று கோரி இலங்கை அரசோடு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
| |

?????? :