சத்யம்: ஸ்பைஸ் குரூப் ஆர்வம் |
||
. |
||
Saturday, 31 January, 2009 11:54 AM
|
||
| . | ||
ஐதராபாத், ஜன.31: மோசடிக்கு உள்ளான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ் குரூப் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. |
||
| . | ||
சத்யம் நிறுவனத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததை அதன் முன்னாள் தலைவர் ராமலிங்கராஜு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சத்யம் நிறுவனத்தை நிர்வகிக்க இயக்குனர் குழுவை மத்திய அரசு நியமித்தது. சத்யம் நிறுவனத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நிறுவன செயல்பாடுகளுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே எல்என்டி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஸ்பைஸ் குரூப் சத்யம் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























