Advertisements




 
 
 
 
 
 

எம்பி தேர்தலில் ஐஸ்வர்யா ராய்

.

Thursday, 29 January, 2009   11:48 AM
.
பாட்னா, ஜன. 29: மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயை நிறுத்த சமாஜ்வாதி கட்சி விரும்புகிறது.
.
மக்களவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

வேட்பாளர் தேர்வு மற்றும் பிரச்சார யுக்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பீகார் மாநிலத்தின் மேப்புரா தொகுதியில் இருந்து பிரபல பாலிவுட் நடிகையும், அமிதாப் பச்சனின் மருமகளுமான ஐஸ்வராய் பச்சனை தேர்லில் போட்டியிட வைக்க சமாஜ்வாதி கட்சி விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தத் தொகுதியில் ஐஸ்வர்யாவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கட்சியை கேட்டுக் கொண்டிருப்பதாக மாநில பாராளுமன்ற குழு உறுப்பினர் துல்சி சிங் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டும் என்று அடிமட்ட தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலையில் இந்தத் தேர்தலில் தனது கணக்கை துவக்கும் வகையில் ஐஸ்வர்யாவை தேர்தலில் நிறுத்த கட்சி விரும்புவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் இருந்து நடிகர் சஞ்சய்தத்தை போட்டியிட வைக்க சமாஜ் வாதி கட்சி தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| |

மற்றவை :