Advertisements




 
 
 
 
 
 

முரசு சின்னம்: சுப்ரீம்கோர்ட் உத்தரவ

.

Wednesday, 28 January, 2009   03:55 PM
.
புதுடெல்லி, ஜன.28: தேசிய முற்போக்கு திராவிட கழகம் முரசு சின்னத்தை ஒதுக்க உத்தரவிடக் கோரி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் 3 வார கால அவகாசம் அளித்துள்ளது.
.
தமிழ்நாட்டில் முக்கிய கட்சியாக உருவெடுத்து வரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை மாநில கட்சியாக அங்கீகரித்து அனைத்து தேர்தல்களிலும் முரசு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி அதன் தலைவர் விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில் விஜயகாந்த் கூறியிருந்ததாவது: கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் 8.33 சதவிகித வாக்குகளை பெற்று மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. எனினும் கட்சிக்கு ஒரேயொரு இடம் மட்டும் கிடைத்தது.

தேர்தலில் பெற்ற வாக்குகளின் விகிதாச்சாரத்தை கருத்தில் கொள்ளாமல் வெற்றி பெற்ற இடங்களை மட்டும் வைத்து தேர்தல் கமிஷன் அங்கீகாரம் தர மறுப்பது தன்னிச்சையானது. பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அங்கீகாரத்தை அளிக்க வேண்டும்.

தேர்தல் கமிஷனின் சின்னம் பெறுவதற்கான விதிமுறையின்படி, கட்சியின் வேட்பாளர்கள் குறைந்தது 6 சதவிகித வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு பேராவது சட்டசபைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் தேமுதிக முதல் விதியின்படி சின்னம் பெறுவதற்கு தகுதி பெற்றதாகிறது.

இரண்டாவது விதிமுறையை சுட்டிக்காட்டி தேமுதிக கேட்க முரசு சின்னத்தை அளிக்க தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. எனவே இனி வரும் தேர்தல்களில் தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.சதாசிவம் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதாடினார். தேர்தல் கமிஷன் சார்பில் மீனாட்சி அரோரா ஆஜரானார்.

ஏற்கனவே ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த  இதே போன்ற மனுவை உச்சநீதி மன்றம் நிராகரித்ததை சுட்டிக் காட்டி அவர் வாதாடினார். எனினும் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்ற நீதிபதிகள் தேர்தல் கமிஷன் பதிலளிக்க 3 வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.
| |

மற்றவை :