.
 
 
 
 
 
 

ராணுவத் தாக்குதலில் 300 பேர் பலி

.

Tuesday, 27 January, 2009   10:53 AM
.
கொழும்பு,ஜன.27: முல்லைத்தீவில் இலங்கை ராணுவம் நேற்று நடத்திய கண் மூடித்தனமான கொடூர பீரங்கி தாக்குதில் அப்பாவி பொது மக்கள் 300 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
.
முல்லைத்தீவை புலிகளிடமிருந்து கைப்பற்றி விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளபோதிலும் அங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக அங்கே உச்சக்கட்ட சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அரசு அறிவித்த "மக்கள் பாதுகாப்பு பகுதியான' புதுக்குடியிருப்பு சுதந்திர புரம்  சந்திப்பு மற்றும் விசுவமடு  உடையார்கட்டு, வல்லிபுனம் ஆகிய பகுதிகளில் இலங்கை ராணுவப் படையினர் நேற்று நடத்திய கண்மூடித்தனமான கொடூர பீரங்கி தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் 300 பேர் கொல்லப்பட்டதாகவும், பல நூறு பேர் படுகாயமடைந்து இருப்பதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

வன்னியின் நான்கு மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு 4 சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள சுமார் 4 லட்சம் தமிழர்களை கொன்று அழிக்கும் நோக்கத்துடன் இலங்கை ராணுவம் இந்த தாக்குதல்களை நடத்தி வருவதாக புலிகள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

இலங்கை படையினரின் தாக்குதல்கள் மிக கொடூரமாக பொது மக்களை நோக்கி அதிகரித்து வருவதால் அப்பாவி மக்களின் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் புலிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

புலிகள் மறுப்பு

இதனிடையே வன்னிப்பகுதியில் வாழும் மக்களை மனித கேடயங்களாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் வன்னிக்கு நேரில் வந்து நிலைமையை பார்க்க வேண்டுமென்று புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

"மக்களுக்காகவே நாங்கள் போராடுகிறோம். அவர்களை மனித கேடயங்களாக புலிகள் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வது முழுக்க முழுக்க பொய்ப் பிரச்சாரமாகும். எமது மக்களை தாக்கி அழிப்பதற்கான பொய் பிரச்சாரமாக இலங்கை அரசு இதனை சொல்கிறது' என்று நடேசன் கூறியிருக்கிறார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும், அவரும் புலிகள் இயக்கமும் மக்களுடனே இருந்து போராடி வருவதாகவும் அவர்கூறியிருக்கிறார்.
| |

?????? :