மக்களவை தேர்தலுக்கு ஆயத்தம் |
||||
. |
||||
Tuesday, 20 January, 2009 11:39 AM
|
||||
| . | ||||
புதுடெல்லி, ஜன. 20: இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு ஆயத்தம் செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தஉள்ளது. . |
||||
| . | ||||
இக்கூட்டங்கள் அடுத்த மாதம் 3ம் தேதி அன்று துவங்கும். அன்று அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 40 மாநில கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளது. 4ம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். புகைப்பட வாக்காளர் பட்டியல், புகைப்பட வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளன. பிப்ரவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறும் கூட்டங்களில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள், காவல் துறை தலைமை இயக்குனர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் |
||||
![]() |
||||
மற்றவை : |
||||
|
|
||||























