Advertisements




 
 
 
 
 
 

மருந்துகடையில் ரூ.18 ஆயிரம் திருட்டு

.

Tuesday, 20 January, 2009   10:53 AM
.
சென்னை, ஜன.20: நாட்டு மருந்து கடையின் பூட்டை உடைத்து 18 ஆயிரம் ரூபாய் திருடியதாக வடஇந்தியாவைச் சேர்ந்த டிப்டாப் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
.
தங்க சாலை தெருவில் நாட்டு மருந்து மொத்த விற்பனைக்கடை நடத்தி வருபவர் சந்தானபேரொளி. காணும் பொங்கல் அன்று இவர் கடையை சீக்கிரமாக மூடிவிட்டுச் சென்றார். மறுநாள் அவர் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் வைத்திருந்த 18 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து பூக்கடை காவல் நிலையத்தில் சந்தானபேரொளி புகார் செய்தார். உதவி கமிஷனர் பாலசந்திரன் மேற்பார்வையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருட்டு நடந்த இடத்தில் காணப்பட்ட கைரேகையும், ஏற்கனவே காவல் நிலையத்தில் பதிவு செய்திருந்த குற்றவாளி ஒருவரின் ரேகையும் ஒத்துப்போனதை அடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

அவருடைய பெயர் பர்வீன் குமார் (வயது 28). ராஜஸ்தானைச் சேர்ந்த அவர் ஏழுகிணறு பகுதியில் உள்ள நம்புலியார் தெருவில் அறையெடுத்து தங்கியிருந்தார். டிப்டாப்பாக உடை அணிந்து வட இந்தியர்களின் திருமண விழாக்களில் கலந்து கொண்டு, சமயம் பார்த்து  நகை அல்லது பணத்தை திருடிச் செல்வது அவருடைய வழக்கம்.

புரசைவாக்கத்தில் இவ்வாறு ஒரு திருமணத்தில் பங்கேற்று ரூ. 3.5 லட்சம் பணத்தை சுருட்டியதாகவும், யானைகவுனி பகுதியில் 5 திருமணங்களில் கைவரிசை காட்டியதாகவும் பர்வீன் குமார் ஏற்கனவே கைதாகி சிறை சென்றுள்ளார். பெங்களூரில் அவர் மீது 10 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவரை போலீசார் கைது செய்து விசாரணை  நடத்தி வருகிறார்கள்.
| |

மற்றவை :