Advertisements




 
 
 
 
 
 

சதுர்வேதி நீக்கம்

.

Friday, 16 January, 2009   11:47 AM
.
புதுடெல்லி,ஜன.16: சமாஜ்வாதி கட்சியுடனான நட்புறவை தொடர விரும்புவதன் அடையாளமாக காங்கிரஸ் மேலிடம் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து சதுர்வேதியை நீக்கியுள்ளது.
.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி கட்சி,தங்களது ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று அவ்வப்போது மிரட்டல் விடுத்து வந்தது.

இதற்கு சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்கை அகில இந்திய  காங்கிரஸ்  செய்தி தொடர்பாளர் சதுர்வேதி கடுமையாக தாக்கிப் பேசினார். அவரது இந்த விமர்சனத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கோபமடைந்தார்.

காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே உரசல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து சதுர்வேதியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆயினும் அவரது விளக்கத்தால் திருப்தியடையாத காங்கிரஸ் தலைமை, நேற்று அவரை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கியது,
அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங்கும், பொதுச் செயலாளர் அமர்சிங்கும் தங்கள் மீதான தாக்குதல் தலைமையின் ஒப்புதலோடுதான் நடைபெறுகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது சதுர் வேதியின் பதவி பறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மேலிடத்தின் இந்த நடவடிக்கையால் சமாஜ்வாதி கட்சி மகிழ்ச்சியடைந்துள்ளது. இதனை நல்ல தொடக்கம் என்று தெரிவித்துள்ள அமர்சிங் இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
| |

மற்றவை :