Home » குற்றம் » பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

செங்குன்றம், ஜூன் 15: மாதவரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை.இவருடைய மனைவி பெயர் கனகவல்லி (வயது 34). கணவன் மனைவி இருவரும் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக பைக் ஒன்றில் ஆரணி அருகே உள்ள கன்னிபுத்தூர் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இன்று காலை செங்குன்றம் அருகே உள்ள கிராண்ட்லைன் டான்பாஸ்கோ பள்ளி எதிரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மற்றொரு பைக்கில் வேகமாக வந்த 2 மர்ம நபர்கள் இவர்களின் அருகே சென்று கனகவல்லியின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மறைந்தனர். இது குறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து பட்டம்பகலில் கணவன் கண் முன்னே மனைவியின் நகையை பறித்துச் சென்றவர்கள் யார் என்று வலை வீசி தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*