Home » குற்றம் » சரக்கு லாரி மோதி பள்ளி மாணவி பரிதாப பலி

சரக்கு லாரி மோதி பள்ளி மாணவி பரிதாப பலி

செங்குன்றம், ஜூலை 15:செங்குன்றம் அருகே பள்ளிக்கு  சென்ற போது தவறி விழுந்த பள்ளி மாணவி மீது சரக்கு லாரி மோதியதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பைக்கை ஓட்டிச்சென்ற மாணவியின் பெரியப்பா லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

செங்குன்றம் அருகே உள்ள விஜியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூர்தீன். இவரது தம்பி மகள் சாய் புன்னிஷா (வயது 15).இவர் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
தினமும் சாய் புன்னிஷாவை ஜூர்தீன் பள்ளிக்கு அழைத்துச்சென்று வருவது வழக்கம்.

வழக்கம்போல் இன்று காலை 8மணிக்கு ஜூர்தின் தனது பைக்கில் மாணவியை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றாராம். அப்போது அந்த பகுதியில் உள்ள சிக்னல் அருகே வந்தபோது நிலை தடுமாறியதில் பைக்கில் ஜூர்தீன் ஒருபக்கமாகவும் புன்னியஷா மறுபுறமும் விழுந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த சரக்கு லாரி மாணவி மீது ஏறி இறங்கியது. இதில் சாய் புன்னிஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
லேசான காயங்களுடன் எழுந்து பார்த்தபோது தம்பி மகள் உடல்நசுங்கியதை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் சித்ரா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காயமடைந்த ஜூர்தீன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

காலையில் பெற்றோருக்கு டாடா காண்பித்து விட்டு பள்ளிக்கு சென்ற மகள் பிணமானதை கேள்வி பட்ட அவரது பெற்றோர் கதறிய காட்சி கல் மனதையும் கலங்க வைத்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர
விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*