மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=9050
Export date: Sun Nov 18 7:55:28 2018 / +0000 GMT

இதய நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை முறை- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்


சென்னை, ஆக.27: இதய நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளித்தல் மூலம் வாழ்நாளை அதிகரிக்க செய்ய முடியும் என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

சென்னையில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் உயர்சிறப்பு இதய நோய் சிகிச்சை சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றம் மருத்துவ முறைகள் பற்றிய கருத்தரங்கத்தினை சென்னையில் அண்மையில் நடத்தியது.

மாரடைப்பு, இதய செயலிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படும் இதய நோயாளிகளின் ஆயுளை, காம்ப்லெக்ஸ் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மருத்துவம் டோட்டல் ஆர்டிரியல் ரீவேஸ்க்குலரைசேஷன் சிகிச்சை ஆகியவற்றால் நீட்டிக்க முடியும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் இளம் வயதினர் இதய நோய்களுக்கு உள்ளாகும் நிலையில் இந்த விழிப்புணர்வு மிகவும் தேவைப்படுகிறது. சென்னை பெருநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கினை தலைவரான முதுநிலை ஆலோசகர் மற்றும் இதய நோய் சிகிச்சை வல்லுனர் டாக்டர் என்.சிவகடாட்சம் ஹார்ட் ஃபெயிலியர் நோயாளிகளுக்கான நவீன மருத்துவ முறைகளைப் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.

அமெரிக்காவில் இருந்து வருகை தந்துள்ள சர்வதேச இதய மருத்துவ வல்லுனரான டாக்டர் விசுவநாத் நடேசன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பாதுகாப்பான முறையில் காம்ப்லெக்ஸ் ஆஞ்சியோபிளாஸ்ட்டி மருத்துவ சிகிச்சை அளித்தல் குறித்தும், முதுநிலை மருத்துவ ஆலோசகர் மற்றும் இதய நோய் சிகிச்சை வல்லுனரான டாக்டர் சி.ஆறுமுகம், மாரடைப்பு வியாதி உடனடி மருத்துவம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை அளிப்பது பற்றியும் உரையாற்றினர்.

பாரதிராஜா மருத்துவமனையின் இதய நோய் அறுவை மருத்துவ வல்லுனர் வி.ராஜேஷ் தமது உரையில், வழக்கமான காலிலிருந்து சிரை எடுக்கும் முறைக்கு பதிலாக முழு தமனி மறுசீரமைப்பு சிகிச்சை செய்வதன் மூலம் இதய நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க முடியும் என்பதற்கான சான்றுகளை முன்வைத்து உரையாற்றினார்.

Post date: 2017-08-27 09:51:11
Post date GMT: 2017-08-27 09:51:11

Post modified date: 2017-08-27 09:51:11
Post modified date GMT: 2017-08-27 09:51:11

Export date: Sun Nov 18 7:55:28 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com