w
Home » விளையாட்டு » உலக பேட்மிண்டன் போட்டி: இறுதிச்சுற்றில் சிந்து

உலக பேட்மிண்டன் போட்டி: இறுதிச்சுற்றில் சிந்து

கிளாஸ்கோ, ஆக. 27: உலக கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான இரண்டாவது அரையிறுதியில் 4வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து, பத்தாவது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யூபே-வை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிந்து அதிரடியாக ஆடினார். 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் சிந்து சென் யூபே-வை 48 நிமிடத்தில் வெற்றி பெற்றார்.

இறுதி ஆட்டத்தில் சிந்து ஜப்பானின் நசோமி ஒகாராவை சந்திக்கிறார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இது இவரது 3வது பதக்கமாகும். ஏற்கனவே 2013 மற்றும் 2014-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*