சென்னை, ஜூன் 15: சென்னை, கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரியங்கா ( வயது 23). இவர் அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
அடையாறு காந்தி நகர் அருகே இவர் சென்று கொண்டிருந்த போது 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள் செல்போன் மற்றும் பணம் வைத்திருந்த இவரது கைப்பையை மின்னல் வேகத்தில் தட்டி பறித்து சென்றனர். இது குறித்து பிரியங்கா போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து செக் போஸ்டில் இருந்த போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.
உடனே எச்சரிக்கையடைந்த போலீசார் பைக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் 2 பைக்கில் வந்து கொண்டிருந்த வாலிபர்களை மடக்கியதில் இவர்களாதான் பிரியங்காவிடம் பை, செல்போன் பறித்தது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறி முதல் செய்தனர்.
குற்றம் செய்த வாலிபர்கள் முகலிவாக்கம் அருகே உள்ள மதனந்தபுரம் பகுதியை சேர்ந்த நிரஞ்சன் (வயது 18), தினேஷ், செபின் உட்பட 4 வாலிபர்கள் என தெரிய வந்தது. போலீசார் அனைவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.