Home » குற்றம் » ஆண் வேடத்தில் திருடிய கில்லாடி பெண்

ஆண் வேடத்தில் திருடிய கில்லாடி பெண்

 

சென்னை, ஜூன் 15: சென்னையில் ஆண் வேடத்தில்
சென்று வீடுகளில் செல்போன், ஐபோன், லேப்டாப் போன்றவற்றை திருடிய 19 வயது இளம்பெண்ணையும், அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொண்டித்தோப்பு பெத்தநாயக்கன் தெருவில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 25). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வசிக்கிறார். நேற்றிரவு உறங்கிக்கொண்டு இருந்தபோது 3 பேர் இவரது வீட்டிற்குள் நுழைந்து ஐபோன், செல்போன், லேப்டாப் பேன்றவற்றை திருடிக்கொண்டு வெளியேறினர்.

அப்போது சத்தம் கேட்டு மணிகண்டன் கண் விழித்தார். அவரின் கூச்சல் சத்தத்தில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதையடுத்து திருடர்களை பொதுமக்களே விரட்டிச்சென்றபோது ஒருவர் பிடிப்பட்டார்.

மற்ற இருவர் தப்பிவிட்டனர். பிடிப்பட்டவரின் பெயர் பீட்டர் (வயது 18). கொருக்குப்பேட்டையை
சேர்ந்த இவரை ஏழுகிணறு போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம்
விசாரணை நடத்தியபோது தப்பியவர்கள் பெயர் தயாளன் (வயது 19) என்றும், பாபுவிஜய் (வயது 19) என்றும் தெரியவந்தது.

இதையடுத்து கொருக்குப் பேட்டையில் இந்த இருவரையும் போலீசார் பிடித்து வந்த விசாரணை நடத்தினர். அப்போது தயாளன் வயது 19 என்பவர் ஆண் அல்ல ஒரு பெண் என்பதை விசாரணையில் போலீசார் கண்டுப்பிடித்து அதிர்ச்சியடைந்தனர். இவரது பெயர் தயானா.

ஆண் வேடத்தில் தனது பெயரை தயாளன் என்று மாற்றிக்கொண்டு பீட்டர், பாபுவிஜய் ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் திருடியது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது இரண்டு கூட்டாளிகளுக்குமே இவர் பெண் என்பது இப்போது தான் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்த கும்பல் எங்கெல்லாம் திருடினார்கள் என்பது குறித்து போலீ
சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*