Home » Flash News » சிபிஐ கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம்

சிபிஐ கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம்

புதுடெல்லி, ஆக.23: ஐஎன்எக்ஸ் மீடியாவில் செய்யப்பட்ட அந்நிய முதலீட்டில் ஆதாயம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் டெல்லியில் சிபிஐ முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராகினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்தார் என சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்தது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ உத்தரவிட்டது. ஆனால் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கண்காணிக்கப்படும் நபர் என அறிவித்து சிபிஐ நோட்டீஸ் பிறப்பித்தது. மேலும் அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விடாதபடி அவர் வந்தால் தகவல் அளிக்கும்படி விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த கார்த்தி சிதம்பரம், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றது. அப்போது கார்த்தி சிதம்பரம் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரா கத்தான் வேண்டும் என கண்டிப்புடன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் அவர் மீது எந்த நேரத்திலும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*