Home » Flash News » காதல் விவகாரத்தில் இளைஞர் மர்ம மரணம்

காதல் விவகாரத்தில் இளைஞர் மர்ம மரணம்

தஞ்சாவூர், ஆக.23:கும்பகோணம் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் கார்த்திக். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திருநாகேஸ்வரத்தில் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார்.

கல்லூரியில் படித்த போது பாளையூரைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி மணிமேகலை, கார்த்திக்கிடம் காதலை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இவர்களது காதல் மணிமேகலையின் பெற்றோருக்கு தெரிய வரவே, திருச்சி குற்றப்புலனாய்வு பிரிவில் காவலராக இருக்கும் மணிமேகலையின் முறைமாமனான நீலமேகத்திற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

காதல் விவகாரம் அறிந்த நீலமேகம், கடந்த சில நாட்களுக்கு முன் கார்த்திக் வீட்டிற்கு வந்து மணிமேகலையுடன் எடுத்த புகைப்படம், மெமரி கார்டு போன்ற ஆதாரங்கள் அனைத்தையும் வாங்கி சென்றுள்ளார்.நீலமேகத்திற்கும், மணிமேகலைக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக வந்த தகவலால் மனம் உடைந்த கார்த்திக் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கார்த்திக்கை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட நீலமேகம், மணிமேகலையை உனக்கே திருமணம் செய்து வைக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்ததாகவும், இதை அடுத்து கார்த்திக் புறப்பட்டுச் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இதை நம்பிச் சென்ற கார்த்திக்கை மது ஊற்றிக் கொடுத்து சித்ரவதை செய்து கொன்று விட்டதாக உறவினர்கள் கூறி வருகின்றனர். போலீசார் நீலமேகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*