Home » Flash News » துப்பாக்கி குண்டு பாய்ந்து மாணவன் பலி

துப்பாக்கி குண்டு பாய்ந்து மாணவன் பலி

திருச்சி, ஆக.23: மணப்பாறை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் 10ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சவரிமுத்து. இவரின் மகன் கெவின் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். சவரிமுத்து தனது வீட்டில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்துள்ளார். சவரிமுத்து மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு வெளியூர் சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த மகன் கெவின் அந்த துப்பாக்கி எடுத்து விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சவரிமுத்து வீட்டிலிருந்து துப்பாக்கி குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கப்பக்கத்தினர் சென்று பார்த்தபோது கெவின் தலையில் குண்டுபாய்ந்து இறந்துகிடந்தார். துப்பாக்கியை தவறுதலாக பயன்படுத்தியதால் கெவின் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*