Home » Flash News » சசிகலாவை நீக்க தீர்மானம் போடாதது ஏன்?

சசிகலாவை நீக்க தீர்மானம் போடாதது ஏன்?

சென்னை, ஆக.22: சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் தலைமையிலான அணியில் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
ஆனால் இது குறித்து எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய போது கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இதற்கு பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஓ.எஸ். மணியன் கூறுகையில், சசிகலா பற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றார். பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்குவோம் என்று வைத்திலிங்கம் கூறியிருப்பது பற்றி கேட்ட போது அது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.

முன்னதாக ஆர்.வைத்திலிங்கம் அளித்த பேட்டியில் பெரும்பாலான நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் சசிகலாவை நீக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சசிகலாவை நீக்குவதற்காக விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*