Home » Flash News » கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல்

கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல்

காஞ்சிபுரம், ஆக.21:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் கல்குவாரியை அகற்ற கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகேயுள்ளது திருபாதல் கிராமம் இங்கு150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறன்றன. இங்குள்ள மலைப் பகுதியில் 2 வருடங்களுக்கு மேலாக தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இதனால் இந்த கிராமத்தில் கடும் சுற்றுச்சூழல் மாசும், அடிக்கடி குவாரியில் வெடி வைப்பதால் வீடுகள் அதிர்வதும். அந்த பகுதியில் கல் துகள் காற்றில் பறந்து கொண்டேயிருப்பதால் சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் ஏற்படுகிறது என்று கூறி அந்த கிராம மக்கள் கல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டுமென தொடர்ந்து அரசு அதிகாரிக்கு கோரிக்கை மனுக்கள் அளித்து வந்தனர்.

ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து அந்த கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் கல்லூரி, பள்ளி மாணவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள வந்தவாசி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒன்றரை மணிக்கு மேல் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*