Home » குற்றம் » இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

அம்பத்தூர் ஜூன் 14:காதலனுடன் நடக்க இருந்த திருமணத்தை பெற்றோர் தள்ளி பேட்டதால் விரக்தி அடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-ஆவடி அடுத்த ஆலத்தூர் தைதான்ய அவின்யூவை சேர்ந்தவர் சந்தியா (வயது 23). பட்டதாரியான இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் மகேஸ் என்பவரை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.இவர்களது காதல் பெற்றோருக்கு தெரிய வரவே முதலில் மறுத்த பெற்றோர்கள் பின்னர் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும் திருமணத்திற்கான தேதியை குறித்தனர்.

காதலனுடன் தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதை பார்த்து சந்தியா சந்தோசத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் சந்தியாவின் பெற்றோர் திருமணத்திற்கு பணம் கிடைக்காததால் திருமணதேதியை ஒரு வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.இதில் மனமுடைந்த சந்தியா வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து வரப்பட்ட புகார் தொடர்பாக முக்தாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியா தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*