Home » குற்றம் » ஐஸ் அவுஸ் பகுதியில் துணிகரம்

ஐஸ் அவுஸ் பகுதியில் துணிகரம்

சென்னை, ஜூன் 14:ஐஸ்அவுசில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் கொள்ளையடித்த நபரை சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் டி.பி. கோவில், 2வது தெருவை சேர்ந்தவர் உமாராணி(வயது 50). இவர் தனது 2 மகன் மற்றம் மகளுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை அவரது மகள் மற்றும் மகன்கள் பணிக்கு சென்று விட்டனர். உமாராணி மாலை வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 35 சவரன் நகையில் 13 சவரனை காணவில்லை.

உடனே இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசிடம் புகார் அளிக்கபட்டது. அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த ராயபேட்டை துணை கமிஷ்னர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் அமைக்கபட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(வயது 34) என்பவர் சம்பவம் நடந்த பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் தான் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் நடந்த 3 மணிநேரத்திலேயே போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*