Home » குற்றம் » மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

சென்னை, ஜூன் 14: மயிலாப்பூரில் வீட்டுமுன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள நடுத்தெருவை சேர்ந்த முருகன் (வயது 28) என்பவர் கடந்த 12-ம் தேதி வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். காலையில் வாகனத்தை காணவில்லை. இது குறித்து மயிலாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி பட்டினப்பாக்கத்தை சேர்ந்த தீபக் (வயது 22), ஆனந்த் (வயது 21) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் வேறு எங்காவது திருட்டில் ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*