Home » குற்றம் » சாலையை கடக்க முயன்ற பெண் பலி

சாலையை கடக்க முயன்ற பெண் பலி

சென்னை, ஆக.12: சாலையை கடக்க முயன்ற பெண் அரசு பஸ் மோதி பலியானார் இது குறித்து போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாம்பரம் நடுவீரப்பட்டை சேர்ந்தவர் பாபு இவரது மனைவி கோமதி (வயது35) இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் .இன்று காலை வேலைக்குச் செல்வதற்காக தாம்பரம் எட்டியாபுரம் சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து கடந்து செல்ல முயன்றபோது கூடுவாஞ்சேரியில் இருந்து குரோம்பேட்டை நோக்கி வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் கோமதி தூக்கி வீசப்பட்டார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து ஒட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*