Home » குற்றம் » பீர்பாட்டிலால் குத்தி பெயிண்டர் கொலை

பீர்பாட்டிலால் குத்தி பெயிண்டர் கொலை

சென்னை, ஆக.12: சேத்துப்பட்டு கூவம் ஆற்றங்கரையில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சேத்துப்பட்டு போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கூவம் ஆற்றங்கரையோரத்தில் இருந்த ஆண் சடலத்தை கைப்பற்றினர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்தவர், சேத்துப்பட்டு ஜோதியம்மன் நகரை சேர்ந்த பட்டு என்கிற பார்த்திபன் (வயது 27) என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பெயிண்டாராக வேலை பார்த்து வரும் பார்த்திபன், நேற்றிரவு நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டில் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பார்த்திபன் உயிரிழந்ததை அறிந்த கொலையாளிகள் அவரின் உடலை சேத்துப்பட்டு கூவம் ஆற்றங்கரையில் வீசிவிட்டு சென்றுள்ளதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெயிண்டர் பார்த்திபன் மீது காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*