Home » குற்றம் » எக்ஸ்பிரஸ் ரெயிலில்ரூ. 25லட்சம் போதை பொருள் பறிமுதல்

எக்ஸ்பிரஸ் ரெயிலில்ரூ. 25லட்சம் போதை பொருள் பறிமுதல்

சென்னை, ஆக.12: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி சென்ற ஒடிசா வாலிபரை போதை தடுப்பு பிரிவுபோலீசார் கைது செய்து ள்ளனர்.மேலும் போதைபொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்புடையவரா என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னையில் இருந்து டெல்லி புறப்படுவதற்கு தயாராக இருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதைப்பொருள் கடத்தி
செல்லப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றனர்.
அப்போது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விரைவு ரெயில் டெல்லி புறப்பட தயாராக இருந்தது. அந்த நேரத்தில் போலீசார் சென்று சோதனை செய்தனர். அப்போது ரெயில் எஸ் 7 ஏசி பெட்டியில் பயணம் செய்த விஷால் (வயது 30) என்ற பயணியின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் ஒரு கிலோ ஹெராயின் போதை ப்பொருள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

உடனடியாக அவரை ரெயிலை விட்டு இறக்கி வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஒடிசா மாநிலத்தைசேர்ந்த விஷால் என்பதும் தெரியவந்தது. அவனிடமிருந்து போதைப்பொருளை போதை பொருள் தடுப்புபோலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 25 லட்சம் என்று கூறப்படுகிறது.
மேலும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் ஆசாமிக்கும் தொடர்புள்ளதாக என்றும் இவற்றை யாருக்காக, எங்கு எடுத்து செல்கிறார் என்றும் இதுபோன்று எத்தனை முறை எடுத்துச்செல்லப்பட்டது என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் மூலம் போதைப்பொருள் கடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்து அவனிடமிருந்த ரூ. 25 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ரெயில் பயணிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*