Home » தமிழ்நாடு » முதல்வர் எடப்பாடி நல்ல முடிவுகளை எடுப்பார்

முதல்வர் எடப்பாடி நல்ல முடிவுகளை எடுப்பார்

சென்னை, ஆக.12: அதிமுக இணைப்பு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்றும் 420 மோசடி சட்டப்பிரிவு பற்றிய பேச்சுக்களை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

முதல்வர் பழனிசாமி தெரிவித்த 420 பெரிதுப்படுத்த வேண்டாம் அது வாய் தவறி வந்த வார்த்தை என்றும் அதிமுகவில் தற்போது நடந்து வருவது அண்ணன் தம்பிளுக்கு இடையான சண்டை தான் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை வனத்துறை சரகங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; விரைவில் எல்லா பிரச்சனைகளும் தீர்வு ஏற்படும். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவுகளை எடுப்பார். இந்த ஆட்சி அடுத்த நான்கு ஆண்டுகள் நடைபெறும்.

சுயலாபத்துக்காக ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்ச்சி கொண்டு பேசுவது சரியல்ல. தவறான செய்திகளை யார் தெரிவித்தாலும் அது தவறு அதனை திருத்துக் கொள்ள வேண்டும். 420 என்று கூறியதை பெரிதுப்படுத்த வேண்டாம். அது வாய் தவறி வந்த வார்த்தை. இது எல்லாம் காலப்போக்கில் மாறும். திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை விழ்த்தி வெற்றி பெறுவோம் ஒ.பன்னீர்செல்வத்துக்கு துனை முதல்வர் பதவி என்று பத்திரிக்கைகள் தான் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.

முதல்வர் எடப்பாடியின் கருத்துகளை பின் பற்றியே செயல்பட்டு வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.
செல்லூர் ராஜூ பேட்டி அதிமுக முன்பே பல சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்ற அனுபவம் கொண்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

கோவையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது ; அதிமுகவுக்கு இதற்கு முன்னரே பல சோதனைகளைச் சந்தித்த அனுபவம் உண்டு அதனால் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை எளிதாக எதிர்கொள்ளும். உதகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். பிற வங்கிகளுக்கு இணையாக வருமான வரி செலுத்தும் அளவுக்கு கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சி அடைந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*