Home » Flash News » தவான், ராகுல் அபார ரன் குவிப்பு

தவான், ராகுல் அபார ரன் குவிப்பு

கண்டி, ஆக 12. பல்லேகலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களத்தில் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களான ஷிகார் தவான் 64 ரன்கள் மற்றும் லோகேஷ் ராகுல் 67 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு டெஸ்டுகளில் முறையே இந்திய அணி 304 ரன்கள், இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசங்களில் இமாலய வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.  இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கண்டி மாவட்டம் பல்லகெலேயில் இன்று தொடங்கியது.

முதலில் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகார் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்து 10 ஓவர்கள் முடிவில் அரைசதம் கடந்து அணிக்கு 52 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராகுல் 74 பந்துகளில் 53 ரன்களும், தவான் 56 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தனர்.

ஆட்டம் இழக்காமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 20 ஓவர்கள் முடிவில், சதத்தை கடந்து அணியின் ஸ்கோரை 113 ஆக உயர்த்தியது. உணவு இடைவேளை நிலவரப்படி, இந்திய அணி 27 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 134 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகார் தவான் 64 ரன்கள் மற்றும் லோகேஷ் ராகுல் 67 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

உணவு இடைவேளைக்கு பின் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் பறிக்கொடுக்காமல் 144 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*