Home » இந்தியா » 63 குழந்தைகள் பரிதாப மரணம்

63 குழந்தைகள் பரிதாப மரணம்

லக்னோ, ஆக.12:  உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள பிஆர்டி மருத்துவ மனையில் கடந்த ஐந்து நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில், கடந்த இரு நாட்களில் மட்டும் 33 குழந்தைகள் இறந்துள்ளன.  குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் என விசாரணை குழு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்சிபாலிட்டிஸ் நோய்தான் காரணம் என அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவித்த குழந்தைகள், மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த 2 நாட்களில் சுமார் 33 குழந்தைகள் உயரிழந்துள்ளன. கடந்த 5 நாட்களில் மொத்தம் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இது குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்கி குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ இதனை மறுத்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்சிபாலிடிஸ் நோய்தான் குழந்தைகள் இறப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து கோராக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அவர் தனது விசாரணைக்கு முடிவில், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் நிலுவை தொகை வழங்கவில்லை பண பாக்கிகாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார்.

வினியோகஸ்தருக்கு ரூ.66 லட்சம் பாக்கியை அரசு செலுத்தாததால், ஆக்ஸிஜன் சப்ளை பாதிக்க ப்பட்டதாகவும் அதனால் இந்த விபரீதங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இரு நாட்கள் முன்புதான் இந்த மருத்துவமனையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு நடத்தியிருந்தார். ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து அவரது கவனத்திற்கு எப்படி வராமல் போனது என்ற கேள்வி எழுந்துள்ளது. கோரக்பூர் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஆர்டி மருத்துவமனை இதுபோன்ற மோசமான நிர்வாகத்திற்கு பெயர் பெற்றது. கடந்த வருடம், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்சிபாலிடிஸ் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 920 குழந்தைகளில் 224 குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் தொடர் இறப்பினால் அதிர்ச்சியடைந்துள்ள அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயரதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*