Home » சினிமா » அஜித்தை வியந்து பாராட்டும் ‘விவேகம்’ படத்தொகுப்பாளர் ரூபன்

அஜித்தை வியந்து பாராட்டும் ‘விவேகம்’ படத்தொகுப்பாளர் ரூபன்

அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்து, சிவா இயக்கி உள்ள படம் ‘விவேகம்’. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில், வெற்றியின் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 24-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. விவேகம் படத்திற்கு தமிழ் சினிமாவின் முக்கிய படத்தொகுப்பாளர்களில் ஒருவரான ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.

விவேகம் பட அனுபவங்கள் குறித்து ரூபன் பேசுகையில், ‘விவேகம்’ படம் முழுவது கைதட்டி கொண்டாடக்கூடிய, ஒரு உண்மையான, பிரம்மாண்டமான சர்வதேச உளவு படம். திரையில் அஜித் தோன்றும் ஒவ்வொரு பிரேமும் பலத்த இடியை போல் மிக வலுவாக இருக்கும். அவரது அசுர உழைப்பை கண்டு வியந்தேன்.

அஜித் இப்படத்தில் செய்திருக்கும் ஆபத்தான சண்டை காட்சிகள் பார்ப்பவர்களை திறந்த வாயை மூடாமல் செய்யும். இப்படத்தின் ‘தலை விடுதலை’ பாட்டின் காட்சியமைப்பு ‘ஆலுமா டோலுமா’ பாடலை விட பத்து மடங்கு ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அஜித்தின் ரசிகர்களுக்கும், பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் ‘விவேகம்’ ஒரு மாபெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும்.

இயக்குனர் சிவாவுடன் பணிபுரிவது அற்புதமான அனுபவம். எங்கள் இருவருடைய சிந்தனை போக்கில் நிறைய ஒற்றுமை இருப்பதால் எனது பனியை மேலும் திறம்பட செய்யமுடிகிறது. அவர் என் மேல் வைக்கும் நம்பிக்கை எனக்கு மேலும் உழைக்க தூண்டுதலாக இருக்கின்றது.

இது ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக இருந்தாலும் இதில் வரும் கணவன் மனைவி காட்சிகள் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது. திரை அரங்குகளில் ரசிகர்கள் வெள்ளத்தோடு ‘விவேகம்’ படத்தை காண ஆவலோடு இருக்கிறேன்’ என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*