Home » சினிமா » ஜாக்பாட்டிற்காக காத்திருக்கும் ஷாம்

ஜாக்பாட்டிற்காக காத்திருக்கும் ஷாம்

கமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கிட்டவர், ரிஸ்க் எடுத்தவர் நடிகர் ஷாம். ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்திற்காக மெலிந்தார், கண்களை வீங்கச் செய்தார். தனது அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர். ‘புறம்போக்கு’ படத்தில் மெக்காலேவாக அசத்தியவர். ஆனால் எந்த விருதுகளாலும் இதுவரை இவரை கண்டு கொள்ளப்படவில்லை. ஷாம் தான் நடித்து வரும் படங்கள் பற்றி கூறியதாவது:-

படம் வெற்றிபெறுவதும், அடுத்த நல்ல கதையில் நடிப்பதும்தான் உண்மையான விருது என்பது என் நம்பிக்கை. அப்படி பார்த்தால் என் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே நான் விருதுகளால் மகிழ்விக்கப்பட்டவன்தான்’ என்றார்.

சத்யராஜ், அரவிந்த சாமி, மாதவன் மாதிரி உங்களுக்கும் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு இருக்கா என்று கேட்டதற்கு, ‘நல்ல இயக்குநர்களால் மட்டுமே அது முடிவு செய்யப்படுகிறது. மேலும் அந்த படம் மக்களை பார்க்க வைக்கக் கூடிய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வெளியே வரவேண்டும்.

அம்மா கிரியேசன்ஸ் சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பார்ட்டி’. இதில் எனக்கு ஒரு அழகான, ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் கேரக்டர். ஒருவேளை அந்த ஜாக்பாட் இதுவாக இருக்கலாம். வெங்கட் இயக்கிய மங்காத்தா அஜித்துக்கு ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக இழுத்து வந்தது. இந்த படத்தில்எனக்கும் எதோ மாற்றம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. சிவா ஒரு நாள் போனில் அழைத்து ஃபிஜிக்கு கிளம்புங்க என்றார். மறு கேள்வி கேட்காமல் கிளம்பி நடிக்க வந்து விட்டேன். பார்ட்டி படத்துல பிரச்சனை பண்ணக்கூடிய மனதில் பதியக்கூடிய ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன் என்று கூறினார்.

தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் நடிக்கிறேன். சமயத்தில் ஹீரோ இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடிக்கிறேன். தனியொருவன் படம் வருவதற்கு முன்னரே செம வில்லனா ஒரு படம் நடிங்க. அது உங்களை மக்கள் மத்தியில் நெருக்கமாக்கும் என்று நண்பர் ஒருவர் கூறினார். அது மாதிரி நினைத்து எதிர்பார்த்து பண்ணிய படங்கள் அவை. ’தில்லாலங்கடி’ தெலுங்கில் ’கிக்’ ஆக வந்து எனக்கு பெரிய பேர் வாங்கிக் கொடுத்த படம். தமிழில் எதிர்பார்த்த அளவில் அமையாதது வருத்தம் தான்.

யுஎஸ்ஸில் சூட் பண்ணிய கார் ரேஸ் பற்றிய படம் ‘காவியன்’ தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ளது. வழக்கம் போல கடின உழைப்பை போட்டிரு க்கிறோம். விரைவில் வெளியாக இருக்கிறது என்று தெரிவி த்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*