Home » சினிமா » பெருமாளின் பக்தையான அனுஷ்கா

பெருமாளின் பக்தையான அனுஷ்கா

Arrow
Arrow
Shadow
ArrowArrow
Slider

ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் எஸ்.துரைமுருகன், பி.நாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘பிரமாண்ட நாயகன்’. நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் ஆகியோரின் நடிப்பில் தமிழில் வெளிவர இருக்கிறது.  ஜெ.கே.பாரவி கதை எழுத கோபால்ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனம் பாடல்களை டி.எஸ்.பாலகன் எழுதியுள்ளார். ‘பாகுபலி’ புகழ் கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார். எஸ்.எஸ். ராஜமௌலியின் குருவான கே.ராகவேந்திர ராவ் இயக்கி உள்ளார்.

‘பிரமாண்ட நாயகன்’ படம் ராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டது. பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளனர்.
மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று நடித்துள்ளார். ஜனரஞ்சகமாக இன்றைய நவீன காலத்திற்கேற்ப மிகச்சிறந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் எனலாம்.

பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம், வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம், ராமா என்பவர் ஹாத்திராம் பாபாவாக மாறியது, பாலாஜி என்று பெயர் வரக்காரணம், திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும் பல சந்தேக வினாக்களுக்கு ஏற்ற விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக அமைத்து தெளிவு படுத்தியுள்ளனர்.

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படம். விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.

தமிழகத் திரைகளில் இந்தப் ‘பிரமாண்ட நாயகன்’ விஸ்வரூப தரிசனம் தரும் விதத்தில் வெளியாகவுள்ளது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் உலகமெங்கும் திரையிட பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*