Home » Flash News » மத்திய அரசு மீது திருநாவுக்கரசர் தாக்கு

மத்திய அரசு மீது திருநாவுக்கரசர் தாக்கு

சென்னை, ஆக.12: அதிமுகவின் இரு அணிகளிடமும் மத்திய அரசு கட்டபஞ்சாயத்து நடத்துகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தூத்துக்குடி செல்லும் வழியில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. விலைவாசி தாறுமாறாக உயர்கிறது. அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.  தமிழகத்தில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக அமைச்சர்கள் டெல்லியில் மண்டியிட்டு ஆட்சியை தக்கவைத்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

அதிமுகவின் இரு அணிகளையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இப்போது இந்த அணிகளிடம் டெல்லியில் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையை பயன்படுத்தி பிஜேபி காலூன்ற முயற்சி செய்கிறது. புதுவை, பீகாரில் பிரச்சனைகளை ஏற்படுத்துவது போல் தமிழ்நாட்டிலும் பிரச்சனைகளை உண்டாக்கலாம். தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். இதில் தாமதம் காட்டினால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*