Home » அரசியல் » எடப்பாடி மீதே நடவடிக்கை எடுப்பேன்: தினகரன்

எடப்பாடி மீதே நடவடிக்கை எடுப்பேன்: தினகரன்

சென்னை, ஆக.11:  அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தஞ்சாவூரில் அளித்த பேட்டியில், கட்சி பொறுப்புக்கு யாரை வேண்டுமானாலும் நியமிக்க எனக்கு அதிகாரம் உள்ளது என்றும், என்னை நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்றும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தவறு செய்தவர்கள் திருந்த வேண்டும். அமைச்சர்கள் எஞ்சிய காலத்திற்குள் சுருட்ட நினைக்கிறார்கள். கட்சியின் நலன் கருதி முதலமைச்சர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் மீது நான் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு இரட்டை இலை சின்னம் கேட்டு தாக்கல் செய்த மனுவில் முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தேர்தல் ஆணையத்தில் யாராவது புகார் செய்தால் இவர்கள் பதவியை இழக்க நேரிடும் என்றும் தினகரன் மிரட்டல் விடுத்தார்.

தினகரன் நேற்று பேட்டியளித்த போது தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, திருச்சி கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*