Home » அரசியல் » அதிமுக ஆகஸ்ட் 15-க்குள் இணைப்பு: அமைச்சர் கே.சி.வீரமணி

அதிமுக ஆகஸ்ட் 15-க்குள் இணைப்பு: அமைச்சர் கே.சி.வீரமணி

சென்னை, ஆக.11:  அதிமுகவின் இரு அணிகளும் ஆகஸ்ட் 15-க்கு முன்னதாக இணையும் என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.சி.வீரமணி ஆகியோர் கூறியுள்ளனர். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவின் இரு அணிகளும் ஆகஸ்ட் 15-க்கு முன்னதாகவே இணைந்து விடும் என்றார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியும், வழிகாட்டி குழுவின் தலைவர் பதவியும் வழங்குவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி மேலும் கூறினார்.

தலைமை கழகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் 27 கட்சி நிர்வாகிகளே கையெழுத்திட்டு இருக்கிறார்கள் என்றும், இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.  மேலும் சிறையில் உள்ள சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அவைத்தலைவர் செங்கோட்டையன் ஆகியோர் அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியில், அதிமுகவின் இரு அணிகளும் சுதந்திர தினத்திற்குள் கண்டிப்பாக இணையும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர் மைத்ரேயன் எம்பி கூறுகையில், எடப்பாடி தலைமையிலான அணியினர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*