Home » சினிமா » கூடி நடந்தால் வெல்வது நானில்லை நாம்:கமல்ஹாசன்

கூடி நடந்தால் வெல்வது நானில்லை நாம்:கமல்ஹாசன்

சென்னை, ஆக.11: நடிகர் கமல்ஹாசன் சில மாதங்களாக அரசியல் சம்பந்தமாக தனது கருத்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அழுகாமல், ஓடி ஒளியாமல் புரட்சிக்கு தயாராகுமாறு, நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முரசொலி பவள விழாவில் கலந்து கொண்ட பின்னர், டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், விம்மாமல், பம்மாமல் ஆவன செய், புரட்சியின் வித்து தனிச்சிந்தனையே என்று குறிப்பிட்டுள்ளார். ஓடி எனைப் பின் தள்ளாதே என்றும், களைத்து என்னை தாமதிக்காதே என்றும் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

கூடி நடந்தால் வெல்வது நானில்லை, நாம் என்றும் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே என்றும் வலியுறுத்தியுள்ளார். மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் மற்றும் தேசியத்தை பழக வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*