Home » சினிமா » ‘கதாநாயகன்’ என் வாழ்க்கையில் முக்கியமான படம்: விஷ்ணு விஷால்

‘கதாநாயகன்’ என் வாழ்க்கையில் முக்கியமான படம்: விஷ்ணு விஷால்

‘கதாநாயகன்’ என் வாழ்க்கையில் முக்கியமான படம்: விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ள படம் ‘கதாநாயகன்’. இதில் விஸ்ணு விஷால், கேதரின் தெரேசா, சூரி, ஆனந்த்ராஜ், அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

லட்சுமணன் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். காமெடி நடிகரான த.முருகானந்தம் இயக்கி உள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஷ்ணு விஷால் பேசியதாவது:-

வாழ்க்கையில் நிறைய போராட்டங்களுக்கு பிறகே இந்த நிலைக்கு வந்துள்ளேன். வென்னிலா கபடி குழு வாய்ப்பு கிடைத்தே பெரிய போராட்டம். அந்த வெற்றிக்கு பிறகு இரண்டு படங்கள் தோல்வி. அதன் பிறகு நீர்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

அதன் பிறகு வேலையின்னு வந்த வெள்ளக்காரன் படத்தை தயாரித்து நடித்தேன். அதுவும் வெற்றி தேடித்தந்தது. தற்போது கதாநாயகன் படத்தை தயாரித்து நடித்துள்ளேன். போன படம் மாதிரி இதிலும் சூரியுடன் கூட்டணி. நல்ல காமெடி படம்.

நகைச்சுவை உணர்வு உள்ள இயக்குனர் கிடைத்துள்ளார். அவர் மறைந்த இயக்குனர் மணிவண்ணனை போன்று நடிப்பிலும், இயக்கத்திலும் திறமையானவராக வருவார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் நடிகர் சிம்பு பட துவக்கத்தில் குரல் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை பாடி உள்ளார். அவர்கள் மூன்று பேருக்கும் எனது நன்றிகள்.

புது முக இயக்குனருடன் பணியாற்றும் போது அதிகமான விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். அடுத்ததாக புதுமுக இயக்குனர்கள் இயக்கும் 2 படங்களில் நடித்து வருகிறேன். ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக படம் எடுக்கிறேன். இந்த படம் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம்.

போராட்டங்களை தாண்டி இங்கு நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி தோல்வியை பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டதில்லை.

இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*