Home » விளையாட்டு » சீன ஓபன்: மரியா ஷரபோவாவுக்கு வைல்டுகார்டு வாய்ப்பு

சீன ஓபன்: மரியா ஷரபோவாவுக்கு வைல்டுகார்டு வாய்ப்பு

பெய்ஜிங், ஆக. 9: சீன ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாட ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவாவுக்கு வைல்டுகார்டு வழங்கப்பட்டுள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரானது அக்டோபர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் விளையாட ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவாவுக்கு வைல்டுகார்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தகுதி சுற்றில் விளையாட முடியாத ஷரபோவாவிற்கு வைல்கார்டு மூலம் நேரடியாக தொடரில் விளையாட தகுதிப் பெற்றுள்ளார்.

முன்னதாக, ஊக்கமருந்து பயன்படுத்திய சர்ச்சையால் ஷரபோவா போட்டிகளில் விளையாட 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், தரவரிசையில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த ஷரபோவா, தடை நீங்கி தற்போது டென்னிஸ் களத்திற்குள் மீண்டும் வந்துள்ளார்.

சமீபத்தில் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஸ்டான்ஃபோர்டு தொடரில் 2வது சுற்றில் காயம் காரணமாக வெளியேறிய ஷரபோவா, ரோஜர்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், காயம் குணமடையாததால் ரோஜர்ஸ் கோப்பை தொடர் மற்றும் அமெரிக்க ஓபன் தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், சீன ஓபன் தொடரில் விளையாட ஷரபோவாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஷரபோவா, இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தடைக்கு பிறகு ஆசியாவில் விளையாட உள்ள இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*