Home » விளையாட்டு » முதலிடத்தில் ஆல்ரவுண்டர் ஜடேஜா

முதலிடத்தில் ஆல்ரவுண்டர் ஜடேஜா

அபுதாபி, ஆக. 9: ஆல்ரவுண்டர்களுக்கான சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாரம்தோறும் சிறந்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, டெஸ்ட் ஆல்ரவுண்டருக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அவருக்கு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக, முதல் இடத்தில் இருந்த வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மேலும் அஷ்வின் 3வது இடத்தில் நீடிக்கிறார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயின் அலி, இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும், இந்திய வீரர் ஜடேஜா முதல் இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து, அஸ்வின் 3வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*