Home » ஆசிரியர் பரிந்துரை » பூட்டை உடைத்து 28 சவரன் கொள்ளை

பூட்டை உடைத்து 28 சவரன் கொள்ளை

சென்னை, ஜூன் 12: குன்றத்தூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் தங்க நகை, ரூ. 30 ரொக்க பணம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 36). இவர் அந்த பகுதியில் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி வேலூருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு  இன்று காலை வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 28 சவரன் தங்க நகை, ரூ. 30 ரொக்க பணம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குன்றத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*