Home » குற்றம் » பூங்கா ரெயில் நிலையம் அருகே முதியவர் தற்கொலை

பூங்கா ரெயில் நிலையம் அருகே முதியவர் தற்கொலை

சென்னை, ஜூன் 12: சென்னை பூங்கா ரெயில் நிலையம் அருகே ரெயில்வே நடைமேம்பாலத்தின் கீழ் இன்று காலை 65 வயது உடைய  ஆசாமி தூக்கில் சடலமாக தொங்கினார். அவர் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூர், பூங்கா ரெயில் நிலையம் இடையே சிந்தாதரிபேட்டையில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்ல ரெயில்வே நடைமேம்பாலம் ஒன்று உள்ளது.  இதன் கீழ் இன்று காலை 65 வயது உடைய மர்ம நபர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதை பார்த்த பொதுமக்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

எழும்பூர் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் தர்மபுத்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். ரோஸ் நிற முழுக்கை சட்டையும், நீல நிற பேண்ட்டும் அணிந்திருந்த அந்த நபர் யார் என்று தெரியவில்லை. சடலத்தை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த நபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்படாரா என்பது குறித்தும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*