Home » Uncategorized » நீட் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

நீட் தேர்வு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி, ஜூன் 9: நீட் தேர்வு முடிவை வெளியிடுவதற்கு மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ இன்று மேல்முறையீடு செய்தது. இதன்மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
மருத்துவக்கல்லூரி மாணவர்  சேர்க்கைக்காக மே 7-ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் ஆங்கிலத்தில கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாகவும், பிற மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாகவும் இருந்ததாக புகார் கூறப்பட்டது.
இந்த பாரபட்சத்தை எதிர்த்து சில மாணவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டார். இதனிடையே பிற மொழி தேர்வு தாள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் தேர்வு முடிவுக்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று சிபிஎஸ்இ சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் திங்கள்கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர். தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதால் நாடுதழுவிய அளவில் சுமார் 12 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*