Home » Uncategorized » பிரிட்டன் பார்லி. தேர்தலில் இழுபறி

பிரிட்டன் பார்லி. தேர்தலில் இழுபறி

லண்டன், ஜூன் 9: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை இருப்பதாகவும் அதனால் அங்கு தொங்கு அவையே அமையும் என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்திந் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டு வரை இருந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்று கூறி திடீர் தேர்தலை  பிரதமர் தெரசா மே  நடத்தினார்.
இதையடுத்து பிரதமர் தெரசா மே தலைமையிலான ஆளும் கன் சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.
மொத்தமுள்ள 650 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், 4.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது. இதுவரை கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது. அக்கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கூறப்படுகிறது.
அதேசமயம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 314 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 266 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை எந்த கட்சியாலும் பெற முடியாது எனவும், தொங்கு பாராளுமன்றம் அமையும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போதைய தகவலின்படி இரண்டு கட்சிகளும் தலா 219 இடங்களைப்பிடித்து யார் வெற்றி பெறுவது என்ற போட்டியில் உள்ளன.  மேலும் பல இடங்களில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முந்தி வருகிறது.  பல இடங்களில் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கையில், தொழிலாளர் கட்சி முன்னிலைபெறத் தொடங்கியது. முதலாவதாக வந்த தகவலின் படி ஜெர்மி கார்பினின் தொழிலாளர் கட்சி 101 தொகுதிகளிலும் தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சி 79 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தன.
அங்கு தொடர்ந்து தீவிரதாக தாக்குதல்கள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு புதியதாக அமையும் அரசைப் பொறுத்தே ஐரோப்பிய யூனியன் விவகாரம், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*