Home » இந்தியா » ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடெல்லி, ஜூன் 7:ஜனாதிபதி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்கும் என்று தெரிகிறது.ஜனாதிபதியின் பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டு பதவிக்காலம் ஜூலை 25-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கு குறைந்தது இரண்டு வாரத்திற்கு முன் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்தலுக்கான ஏற்பாடுகளை நஜீம் ஜைதி தலைமையிலான தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை தேர்தல் தேதியை அறிவிக்க முடிவு செய்திருப்பதாக டெல்லியில் தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் ஆளும் பிஜேபி கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளார். நேற்று நடைபெற்ற காரியக்கமிட்டி கூட்டத்திலும் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிஜேபி கூட்டணி சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். என்றாலும் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் வேட்பாளர்கள் தேர்வு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*