Home » சென்னை » மத்தியஅரசுக்கு வாசன் கோரிக்கை

மத்தியஅரசுக்கு வாசன் கோரிக்கை

சென்னை,ஜூன் 5:மத்திய அரசு பிரீமியம் தட்கல் முறையை தவிர்ப்பதற்கும், வெளிப்படைத் தன்மையோடு, முன்னறிவிப்பு செய்து செயல் படுத்துவதற்கும் இரயில்வே அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜிகே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது 125 ரெயிலில் பிரீமியம் தட்கல் முறை முன்னறிவிப்பின்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே துறைக்கு வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக பிரீமியம் தட்கல் முறையை நடை முறைப் படுத்துவது ஏற்புடையதல்ல. காரணம் பிரீமியம் தட்கல் முறையால் சாதாரண படுக்கை வசதிகொண்ட ரெயில் பயணச்சீட்டின் கட்டணம், முன்பதிவு முறையில் வாங்குவதை விட சுமார் 2 முதல் 3 மடங்கு அதிகம்.

இதே ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்வதற்கு முன்பதிவு கட்டணம் ரூ. 810 என்றால் தட்கல் முறையில் ரூ. 1,125, பிரீமியம் தட்கல் முறையில் ரூ. 1,800 ஆகிறது. அதே போல கோரமண்டல் விரைவு ரெயிலில் 2 அடுக்கு குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வதற்கு முன்பதிவு முறையில் 2,540 ரூபாய் என்றால் தட்கல் முறையில் முன்பதிவு செய்வதற்கு ரூ. 3,065 ஆகிறது, அதே சமயம் பிரீமியம் தட்கல் என்றால் ரூ. 7,510 ஆகிறது. ரயில்வே அமைச்சகம் அத்துறைக்கு வருவாய் ஈட்டுவதற்கு ரெயில் பயணிகள் மீது சுமையை ஏற்றக்கூடாது. எனவே மத்திய அரசு பிரீமியம் தட்கல் முறையை தவிர்ப்பதற்கும், வெளிப்படைத்தன்மையோடு, முன்னறிவிப்பு செய்து செயல்படுத்துவதற்கும் இரயில்வே அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*