Home » சினிமா » நயன்தாராவை பார்த்து நடுங்கும் நாயகிகள்

நயன்தாராவை பார்த்து நடுங்கும் நாயகிகள்

தமிழில் தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடிகர் அதர்வாவுக்கு அக்காவாக நடித்து வருகிறார். நயன்தாராவை தனது படங்களில் நடிக்க வைக்க எத்தனை கோடி கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். மூத்த நடிகையான இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க இளம் ஹீரோக்கள் உட்பட அனைவரும் ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் நயன்தாராவோ துணிந்து ரிஸ்க் எடுத்து நடிகர் அதர்வாவுக்கு அக்காவாக நடித்துள்ளார். கதைப்படி சிபிஐ அதிகாரியாக நடிப்பதுடன் 4 வயது குழந்தைக்கு அம்மாவாகவும் வருகிறார். புராண கதைகளாக இருந்தாலும் மாயா, டோரா போன்ற திரில்லர் படங்களாக இருந்தாலும் தனது நடிப்பாற்றல் மூலம் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறார். தன்னுடைய இமேஜை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கதை பிடித்திருந்தாலும் உடனே ஓகே சொல்லிவிடுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து அவர் நடித்து வருவதால் மற்ற கதாநாயகிகள் நயன்தாராவின் இந்த துணிச்சல் முடிவை பார்த்து கலக்கத்தில் உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*