Home » சென்னை » அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

சென்னை, ஜூன் 5:சென்னையில் அதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பட்டினப்பாக்கம் சீனுவாச புரத்தைச் சேர்ந்தவர் செந்தில் நாதன் (வயது 40). அதிமுக பிரமுகர். திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரிடம் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை செந்தில்நாதன் அப்பகுதி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் அவரை அரிவாளால் வெட்டினர்.

இதில், படுகாயமடைந்த அவர் ராயப்பட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது தொடர்பாக அவரது புகாரின் பேரில் முன்விரோதம் காரணமாக அதேபகுதியைச் சேர்ந்த தினேஷ்(வயது30), மற்றொரு தினேஷ்(வயது 28), சதீஷ்(வயது 31) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*