Home » இந்தியா » தனியார் டிவி அதிபர் வீட்டில் சோதனை

தனியார் டிவி அதிபர் வீட்டில் சோதனை

புதுடெல்லி, ஜூன். 5-தனியார் வங்கியில் ரூ.48 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராயின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் வங்கியிடம் கடன் பெற்றுஅதை அடைக்காமல் ரூ.48 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராய் அவரது மனைவி ராதிகா ராய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அவர்களது வீடு உட்பட 4 இடங்களில் இன்றுகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அவரது வீடு அமைந்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தார் கூறுகையில் பழைய, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டு இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது. 

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*